தமிழ்நாடு

மீனவர்களின் வலையில் சிக்கிய பிஎஸ்எல்வி ராக்கெட்டின் பாகம்

மீனவர்களின் வலையில் சிக்கிய பிஎஸ்எல்வி ராக்கெட்டின் பாகம்

webteam

புதுச்சேரி கடலில் மீனவர்களின் வலையில் பிஎஸ்எல்வி ராக்கெட்டின் பாகம் கிடைத்துள்ளது.

புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் பகுதி மீனவர்கள், ஃபைபர் படகு மூலம் மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது அவர்களது வலையில் 30 அடி நீளமுள்ள உருளை போன்ற ஒரு பொருள் சிக்கியுள்ளது. அந்த உருளையை 4 படகுகளில் வைத்து மீனவர்கள் கரைக்கு எடுத்து வந்தனர். தகவலின்பேரில் நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் அதை சோதனை செய்தனர். 

இது குறித்து அளிக்கப்பட்ட தகவலின்பேரில் காவல்துறை உயரதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து அந்த உருளையை சோதனை செய்தனர். அதில் ராக்கெட்டுக்கு தேவையான எரிபொருள்களை நிரப்பிச் செல்லும் உருளை என தெரியவந்தது.

அதாவது, ராக்கெட் மேலே செல்ல, ராக்கெட்டைச் சுற்றி 5 எரிபொருள் நிரப்பிய உருளைகள் இருக்கும். இந்த உருளைகள் தான் தீயைக் கக்கிக்கொண்டு ராக்கெட்டை மேலே கொண்டு செல்லும். எரிபொருள் முடிந்தவுடன் இந்த உருளைகளை ராக்கெட்டில் இருந்து பிரிந்து ஆழ்கடலில் விழுந்து விடும். 

அவ்வாறு விழுந்த அந்த உருளை கடல் சீற்றத்தால் கரைப்பகுதிக்கு வந்திருக்கக்கூடும் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து இஸ்ரோ அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். பிஎஸ்எல்வி ராக்கெட்டின் பாகம் அது என அவர்கள் தெரிவித்தனர்.