தமிழ்நாடு

நாகை: சிபிசிஎல் நிறுவனத்துக்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு

நாகை: சிபிசிஎல் நிறுவனத்துக்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு

Sinekadhara

நாகை மாவட்டம் பனங்குடியில் உள்ள சிபிசிஎல் நிறுவனத்தின் விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிபிசிஎல் நிறுவனத்தால் ஏற்கெனவே கையகப்படுத்தப்பட்ட 400 ஏக்கர் நிலத்தைப் பராமரிக்காமல் விட்ட காரணத்தினால் அவ்விடம் தற்போது கருவேலங்காடாக மாறியுள்ளது. இதனால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீர் குறைந்து குடிநீருக்கே அல்லாடும் நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனிடையே சிபிசிஎல் நிறுவன விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து பனங்குடி உள்ளிட்ட ஐந்து ஊராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது. இருப்பினும் இந்த ஐந்து ஊராட்சிகளில் நிலம் கையகப்படுத்தும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் பல்வேறு கட்டப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று சிபிசிஎல் நிறுவனத்தை கருப்புக் கொடியுடன் விவசாயிகள் முற்றுகையிட்டனர். போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள் ஒப்பாரி வைத்து தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். தங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணியை கைவிட வேண்டும் என போராட்டத்தில் பங்கேற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.