தூத்துக்குடி - நெல்லை சாலை புதிய தலைமுறை
தமிழ்நாடு

துண்டிக்கப்பட்ட வழித்தடங்கள்... நெல்லை - திருச்செந்தூர் சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை!

webteam

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழையால் சிவகளை - பெருங்குளம் இடையேயான குளம் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நெல்லை - திருச்செந்தூர் இடையேயான சாலை முழுமையாக அடித்துச் செல்லப்பட்டது.

flood

இதனால் நெல்லையில் இருந்து சிவகளை, ஏரல் வழியாக திருச்செந்தூருக்கும், தூத்துக்குடிக்கும் செல்லும் வழித்தடங்கள் துண்டிக்கப்பட்டன. இதனால் சிவகளை, பெருங்குளம் பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகள் தொடங்கியுள்ள சூழலில், பணிகள் நிறைவு பெற குறைந்தபட்சம் 15 நாட்களாகும் என தெரிகிறது. இதனால் அப்பகுதி மக்கள் செய்வதறியாது திகைத்துள்ளனர்.

சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் தங்களது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கும் மக்கள், போர்க்கால அடிப்படையில் சாலையை சீரமைக்க அரசை வலியுறுத்தியுள்ளனர்.