தமிழ்நாடு

“சாலையை காணோம்” - வடிவேலு காமெடி பாணியில் மக்கள் புகார்

“சாலையை காணோம்” - வடிவேலு காமெடி பாணியில் மக்கள் புகார்

webteam

ராமநாதபுரத்தில் சாலையைக் காணவில்லை என மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே காமராஜபுரத்தில் மீனவர்கள் மற்றும் பனை தொழிலாளர்கள் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். ஊராட்சி நிர்வாகம் சார்பில் புதிய சாலை அமைக்க, 19 புள்ளி 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக இப்பகுதியில் சாலை அமைக்கப்படவில்லை. இந்நிலையில் 2017 - 18 ஆம் ஆண்டு தார் சாலை அமைக்கப்பட்டதாக, அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டிருப்பது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

சாலை அமைத்ததாகக் கூறி 19 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மோசடி செய்துள்ளதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். வடிவேல் பட காமெடியாக, ‘கிணறு வெட்டிய ரசீது இருக்கு, கிணற்றை காணவில்லை’ என்பது போல் சாலை அமைக்கப்பட்டதாக பணி விபரத்தின் பலகை மட்டும் உள்ளது என மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதற்கு சமந்தப்பட்ட மாவட்ட நிர்வாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, குறிப்பிட்ட மதிப்பீட்டில் சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.