தமிழ்நாடு

பொதுமக்களே உஷார்! கொஞ்சம் அசந்தால் பறிபோய்விடும்! - சிசிடிவியில் சிக்கிய செல்ஃபோன் திருடன்

பொதுமக்களே உஷார்! கொஞ்சம் அசந்தால் பறிபோய்விடும்! - சிசிடிவியில் சிக்கிய செல்ஃபோன் திருடன்

webteam

சென்னை திருமங்கலத்தில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் உணவு வாங்கிக் கொண்டிருந்த நபரின் சட்டை பாக்கெட்டில் இருந்த செல்போனை மர்ம நபர் திருடும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை பாடியைச் சேர்ந்தவர் முஹம்மது மன்சூர் உயர்நீதி மன்ற வழக்கறிஞராக பணியாற்றி வரும் இவர், தனது குடும்பத்துடன் திருமங்கலத்தில் இயங்கிவரும் விஆர்.மாலில் திரைப்படம் பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது திரைப்படம் துவங்க நேரமான நிலையில், மேல்தளத்தில் உள்ள உணவகத்தில் சாப்பிடுவதற்காக சென்ற அவர் உணவுகள் ஆர்டர் செய்து உணவை பெற்றுக்கொண்டு குடும்பத்தினருடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது செல்ஃபோன் தொலைந்து போனதை அறிந்து அதிர்ச்சியடைந்த அவர், உணவக உரிமையாளரிடம் கூறி அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தனர். அதில், முஹம்மது மன்சூர் உணவு ஆர்டர் செய்து கொண்டிருந்த போது மர்ம நபர் ஒருவர் அவரது சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த செல்ஃபோனை லாவகமாக திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையடுத்து சிசிடிவி காட்சிகளைக் கொண்டு திருட்டு சம்பவத்தில் ஈடுப்பட்ட நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். பொது இடங்களில் செல்லும்போது ஏற்படும் கவனக்குறைவின் காரணமாக செல்ஃபோனை திருடும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை: பிரபல வணிக வளாகத்தில் உணவு வாங்கிக்கொண்டிருந்த நபரின் சட்டை பாக்கெட்டில் லாவகமாக செல்போனை திருடிய மர்ம நபர்.. சிசிடிவி காட்சிகள் வைரல்#Chennai | #Theft | #ViralVideo | @tnpoliceoffl pic.twitter.com/xAyKSa9GA2
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) September 13, 2022