தமிழ்நாடு

பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஆசிரியருக்கு பொதுமக்கள் தர்ம அடி

பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஆசிரியருக்கு பொதுமக்கள் தர்ம அடி

rajakannan

திருவண்ணாமலையில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த புகாரில்,‌‌ கணித ஆசிரியரை பொதுமக்கள் ரத்தம் வழிய சரமாரியாக தாக்கினர்.

செங்கம் அருகே உள்ள கண்ணக்குருக்கை மேல்நாச்சிப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு அவரது கணித ஆசிரியர் கண்ணன் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மாணவி தனது பெற்றோர்களிடம் தெரிவித்திருக்கிறார். அதனைகேட்டு ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோரும் உறவினர்களும் பள்ளியை முற்றுகையிட்டனர்.

மாணவியின், பெற்றோரும், கிராம மக்களும் பள்ளியை தலைமை ஆசிரியர் சாந்தகுமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், ஆசிரியர் கண்ணன் இருந்த வகுப்பறைக்கு சென்ற அவர்கள், அவரை சரமாரியாக தாக்கினர். வகுப்பறையில் இருந்த நாற்காலியை கொண்டு அடித்தனர். சுமார் 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சேர்ந்து அடித்ததில் ஆசிரியரின் தலையில் ரத்தம் வழிந்தது. 

வகுப்பறையில் 20க்கும் மேற்பட்ட மாணவிகள் முன்னிலையில் அவர் தாக்கப்பட்டர். தனது ஆசிரியர் தாக்கப்படுவதை கண்டு வகுப்பறையில் இருந்த மாணவி அலறியடித்து கத்தினர்.