pm modi, CSKvsRCB PT
தமிழ்நாடு

தலைப்புச் செய்திகள்| ’என்னை தூக்கிலிடுங்கள்-மோடி பேச்சு’ To பிளே ஆஃப்க்கு மல்லுக்கட்டும் CSK Vs RCB!

webteam

# "நேர்மையற்றவன் என்று நிரூபித்துக்காட்டிவிட்டால் என்னை
தூக்கிலிடுங்கள்" - தவறான வழியில் சிலருக்கு ஆதாயம்
தேடித்தந்ததாக ராகுல்காந்தி குற்றம்சாட்டுவதற்கு பிரதமர் மோடி பதில்...

# ராய்பரேலி தொகுதியில் வாகன பேரணியில் ஒன்றாக சேர்ந்து
பங்கேற்கும் எதிர்க்கட்சி தலைவர்கள்.... ராகுல் காந்தியுடன், சோனியா, பிரியங்கா, அகிலேஷ் யாதவ் பரப்புரை செய்ய திட்டம்...

# ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா சென்னை அணி?... நாளைய கடைசி லீக் போட்டியில் பெங்களூரு அணியுடன் பலப்பரீட்சை....

csk vs rcb

# கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை எச்சரிக்கை... 14 மாவட்டங்களில் கனமழைக்கு
வாய்ப்புள்ளதாக கணிப்பு...

# பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல்... இன்று மாலை மீண்டும் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு...

# சேலம் ஆத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து சம்பவத்தில் விசாரணை தீவிரம்... சிவகாசியில் விதிகளை மீறி செயல்பட்ட
பட்டாசு ஆலையின் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை...

# ”மற்றவர்களை கவனிப்பது வேலை அல்ல, எனது வழியில் போய்
கொண்டிருக்கிறேன்”... விமர்சிப்பவர்களுக்கு பதிலடி
கொடுக்கும் வகையில் வீடியோ வெளியிட்ட இளையராஜா!

# போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?.... அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி
விவரங்களை கேட்டறிந்த முதலமைச்சர் ஸ்டாலின்...

# தஞ்சை மருத்துவக் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை
அளிக்கப்பட்டதாக புகார்... பேராசிரியர் பணியிட மாற்றம்; பயிற்சி மருத்துவர்களை இடமாற்றம் செய்ய பரிந்துரை...

# நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியில் ஜூனியர் மாணவர்களை ராகிங் செய்ததாக புகார்... இரண்டு மாணவர்கள் சஸ்பெண்ட்...

# உடுமலைப்பேட்டை சிறுமிகள் கூட்டுப்பாலியல் வன் கொடுமை வழக்கில் மேலும் ஒருவர் கைது... ஏற்கனவே 3 சிறுவர்கள் உட்பட 9 பேர் கைதான நிலையில் காவல்துறை தொடர் நடவடிக்கை...

# விருதுநகர் அருகே ரயில் மோதி தாய், மகள் உயிரிழப்பு...
மாற்றுத்திறனாளி தாயை மகள் காப்பாற்ற முயன்றபோது நேர்ந்த சோகம்...

# சேலம் அருகே இருசக்கர வாகன பெட்டியில் இருந்து மூன்றரை லட்சம் ரூபாய் பணம் திருட்டு... நகையை அடமானம் வைத்து வங்கியில் பணம் பெற்றுவந்த விவசாயி வேதனை...

# டெல்லியில் ஆம் ஆத்மி எம்.பி தாக்கப்பட்ட புகாரில் முதலமைச்சர் கெஜ்ரிவாலின் உதவியாளர் மீது வழக்குப்பதிவு....
இன்று நேரில் ஆஜராகுமாறு தேசிய மகளிர் ஆணையம் சம்மன்...

# ஹைதராபாத்தில் கனமழையால் சாலையில் பெருக்கெடுத்த தண்ணீர்... வாகன ஓட்டிகள் தத்தளித்த வீடியோ காட்சிகள் வைரல்..

# இந்தோனேஷியாவில் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே பயணிகள் விமானத்தில் தீ... உடனடியாக தரையிறக்கப்பட்டதால்
உயிர்தப்பிய பயணிகள்...

# பிரான்ஸின் பழமையான கார்காசோன் நகரை சென்றடைந்த ஒலிம்பிக் சுடர்... உற்சாக வரவேற்பளித்த பொதுமக்கள்...