தமிழ்நாடு

"நீட் தேர்வெழுதிய மாணாக்கர்களுக்கு மனநல ஆலோசனை" - மா.சுப்ரமணியன் பேட்டி

"நீட் தேர்வெழுதிய மாணாக்கர்களுக்கு மனநல ஆலோசனை" - மா.சுப்ரமணியன் பேட்டி

கலிலுல்லா

நீட் தேர்வை எழுதிய தமிழ்நாட்டு மாணாக்கர்களுக்கு தொலைபேசி வாயிலாக மனநல ஆலோசனை வழங்கும் பணி முனைப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பூசி முகாமை, அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர், 100 சதவிகித கொரோனா தடுப்பூசி போடப்பட்ட 10 ஊராட்சிகளின் தலைவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களையும் கேடயத்தையும் அமைச்சர்கள் வழங்கினர்.

பின்னர் செய்தியார்களிடம் பேசிய மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுதிய மாணாக்கர்களில் சுமார் 200 பேர் மன அழுத்தத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறினார்.