சந்தேகம் தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டியது தேர்வுக் குழுவின் வேலை என நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம் பற்றி கோவை பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரி டீன் ராமலிங்கம் விளக்கம் அளித்துள்ளார்.
கோவைத் தனியார் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவி, ஒரு மாணவர் மீது சந்தேகம் இருப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநரகத்திற்கு தனியார் மருத்துவக் கல்லூரி சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இது குறித்து விளக்கம் அளித்த பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரி டீன் ராமலிங்கம், ''150 மாணவர்களின் ஆவணங்களை சோதனை செய்ததில் 2 மாணவர்களின் புகைப்படங்கள் வேறு மாதிரி தெரிந்ததால் ஒரு மாணவன், ஒரு மாணவி மீது சந்தேகம் எழுந்தது; சந்தேகம் தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டியது தேர்வுக் குழுவின் வேலை. மாணவர்களின் புகைப்படம்தான் என 2 மாணவர்களின் பெற்றோரும் உறுதியளித்துள்ளனர்'' எனத் தெரிவித்துள்ளார்