வக்பு சட்டத்திருத்திற்கு எதிராக நெல்லையில் போரட்டம் pt web
தமிழ்நாடு

“பாஜக ஆட்சிப் பொறுப்பை ஏற்றத்தில் இருந்து இதான்”- வக்பு வாரிய திருத்தச்சட்டத்திற்கு எதிராக போராட்டம்

வக்பு வாரிய திருத்தச் சட்டத்தினை எதிர்த்து நெல்லையில் தமிழ்நாடு தவ்ஹீத் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

PT WEB

வக்பு வாரிய திருத்தச் சட்டத்தினை எதிர்த்து நெல்லையில் தமிழ்நாடு தவ்ஹீத் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

நெல்லை வண்ணாரப்பேட்டை பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். வக்பு வாரியத்துக்கு சொந்தமான நிலங்களை புதிய சட்டம் மூலம் அபகரிக்க முயற்சிப்பதாகவும் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களில் ஒருவர் புதிய தலைமுறையிடம் பேசுகையில், “பாஜக மத்தியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற நாளில் இருந்து இன்று வரையிலும் இஸ்லாமியர்களுக்கு எதிரான பல்வேறு சட்டங்களைக் கொண்டு வந்துகொண்டே இருக்கின்றனர்.

முத்தலாக் தடைச் சட்டம், காஷ்மீரில் 370 பிரிவை நீக்க கொண்டு வந்த சட்டம் போன்ற எண்ணற்ற சட்டங்களைக் கொண்டுவந்து இஸ்லாமியர்களுக்கு எதிரான பாசிச சிந்தனையை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். சமீபத்தில் வக்புவிலும் அவர்கள் கைவைத்துள்ளனர்” என தெரிவித்தார்.