தமிழ்நாடு

காதலர் தின அட்டைகளைக் கிழித்து ஆர்ப்பாட்டம்

காதலர் தின அட்டைகளைக் கிழித்து ஆர்ப்பாட்டம்

Rasus

காதலர் தினக் கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் பாரத் சேனாவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது.  காதலர் தினத்தை சிறப்பாகக் கொண்டாட காதலர்கள் இப்போதே தயாராகிவிட்டனர். தங்கள் காதலிக்கோ/ காதலனுக்கோ பிடித்தப் பொருட்களை அந்நாளில் பரிசளிப்பதை அவர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். மேலும் காதலர் தினத்தில் ரோஜாப் பூ, டெடி பியர் உள்ளிட்டவைகளின் விற்பனை களைகட்டும். ஒருநாள் மட்டுமில்லாமல் ஒருவாரத்திற்கு இன்றைய இளைஞர்கள் காதலர் தினத்தை சிறப்பாகக்  கொண்டாடுகின்றனர். குறிப்பாக பிப்ரவரி 14ம் தேதி பூங்கா, கடற்கரை, தியேட்டர் என பல இடங்களுக்கு தங்களது துணையுடன் காதலர்கள் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்நிலையில் காதலர் தினக் கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் பாரத் சேனாவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காதலர் தினம் என்ற பெயரில் பொது இடங்களில் அநாகரிகமான செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், காதலர் தினத்தை தடை செய்ய கோரியும் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அத்தோடு மட்டுமில்லாமல் காதல் தின வாழ்த்து அட்டைகளைக் கிழித்தும் அவர்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.