தமிழ்நாடு

வேலைநிறுத்தத்தில் தண்ணீர் லாரி உரிமையாளர்கள்: சிக்கலில் பொதுமக்கள்!

வேலைநிறுத்தத்தில் தண்ணீர் லாரி உரிமையாளர்கள்: சிக்கலில் பொதுமக்கள்!

webteam

இன்று முதல்  தண்ணீர் லாரி உரிமையாளர்கள் தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

லாரிகள் சிறைபிடிக்கப்படுவதை கண்டித்தும், உரிமையாளர்கள் மீது திருட்டு வழக்கு பதிவு செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆகஸ்ட் 21முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டது. மேலும் தண்ணீர் எடுக்க அரசு தரப்பில் உரிமம் வழங்கும் வரை பேச்சுவார்த்தையில் ஈடுபடமாட்டோம் எனவும் அவர்கள் தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில் இன்று முதல் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 4500 லாரிகள் வேலைநிறுத்தத்தால் நிறுத்தப்பட்டுள்ளன. தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக பொதுமக்களுக்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.