விபரீத முடிவெடுத்த ஆயுள் தண்டனை கைதி pt desk
தமிழ்நாடு

மதுரை மத்திய சிறையில் விபரீத முடிவெடுத்த ஆயுள் தண்டனை கைதி – போலீசார் விசாரணை

மதுரை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி விபரீத முடிவெடுத்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

webteam

செய்தியாளர்: மணிகண்டபிரபு

மதுரை மத்திய சிறையில் 1500-க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள கன்னிசேர்வை பட்டியைச் சேர்ந்த தவ ஈஸ்வரன், அவரது தந்தை முருகன் ஆகியோர், கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு அடைக்கப்பட்டுள்ளனர்.

Madurai central jail

இந்நிலையில், மதுரை மத்திய சிறையில் இன்று அதிகாலை கழிவறையில் தவ ஈஸ்வரன் விபரீத முடிவெடுத்துள்ளார். இதை அறிந்து சக கைதிகள் அவரை மீட்ட நிலையில், அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர், வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து சிறைத்துறை நிர்வாகம் மற்றும் கரிமேடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் மதுரை மத்திய சிறையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.