pm modi in trichy PT
தமிழ்நாடு

திருச்சி வந்தார் பிரதமர் நரேந்திர மோடி.. முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள் நேரில் வரவேற்பு!

திருசசிக்கு இன்று வருகை தந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில பங்கேற்றுள்ளார். இதனை தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

webteam

செய்தியாளர் - லெனின் சு.

பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி திருச்சி வந்தடைந்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரை விமான நிலையத்தில் வரவேற்றார். பிரதமரின் நிகழ்வுகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

திருச்சி சர்வதேச விமான நிலையத்தை தரம் உயர்த்தி புதிய முனையத்தை கட்ட இந்திய விமான நிலைய ஆணைய குழுமம் ரூ.951 கோடி ஒதுக்கீடு செய்தது. இதனை தொடர்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டு கட்டுமான பணிகள் தொடங்கியது. நிலையில், கூடுதலாக ரூ.249 கோடி செலவு செய்து ரூ.1200 கோடியில் கட்டுமான பணிகள் நிறைவு பெற்றுள்ளது.

Trichy

பிரதமர் மோடி வருகை

பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள புதிய முனையம் திறப்பு விழா இன்று (ஜன 2) நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி, கலந்து கொண்டு புதிய முனையத்தை திறந்து வைப்பதுடன், பல்வேறு புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார். அதேபோல் முடிவுற்ற திட்டங்களையும் தொடங்கி வைக்க உள்ளார். இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.

பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ஸ்டாலின் வருகையையொட்டி, திருச்சியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. திருச்சி டிவிஎஸ் டோல்கேட் முதல் பாரதிதாசன் பல்கலை கழகம் வரை பாதுகாப்பு பணிகளுக்காக உள்ளூர் மற்றும் வெளியூர் போலீசார் 8 ஆயிரம் பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். விமான நிலையத்தின் உட்புறங்களில் மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் சுமார் 100 பேர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுகின்றனர்.

police

பிரம்மாண்டமான மேடை

விமான நிலையத்தின் வளாகத்தில் பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு குழு (எஸ்.பி.ஜி.) அதிகாரிகள் 30 பேர் திருச்சி வந்து, விமான நிலையம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் பிரதமர் பயணிக்கும் பாதைகளை ஆய்வு செய்தனர். பின்னர் பாதுகாப்பு பணிகள் குறித்து தமிழக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

திருச்சி விமான நிலையம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகிய இரு இடங்களிலும் 5 அடுக்கு பாதுகாப்பு மேற்கொள்ளப்படும் என பாதுகாப்பு அதிகாரிகள் கூறினர். மேலும் விமான நிலையம் அருகே உள்ள வீடுகள், பணியாற்றுபவர்களின் ஒட்டு மொத்த விவரங்களையும் காவல்துறை மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் சேகரித்துள்ளனர். அதில் விமான நிலையத்தில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களின் விபரங்களும் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

இந்நிலையில், காலை 10.30 மணியளவில் பிரதமர் மோடி திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார்.

விமான நிலையத்தில் இருந்து திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38 வது பட்டமளிப்பு விழாவுக்கு பிரதமர் மோடி சென்றார். பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நிலையில், தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், உயர்கல்வி துறை அமைச்சரும், பல்கலைக்கழக இணைவேந்தருமான ராஜகண்ணப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பாதுகாப்பு காரணங்களை மையப்படுத்தி தேர்வு செய்யப்பட்டுள்ள குறிப்பிட்ட சில மாணவர்களுக்கு மட்டும் பட்டம் வழங்கப்படுகிறது.

முதலில் முதலமைச்சர் ஸ்டாலினும் அவரை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியும் உரையாற்றினர். முதல்வர் பேசும் போதும் கல்வியின் முக்கியத்தும் குறித்து பேசினார்.