தமிழ்நாடு

தமிழகத்தில் குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு

தமிழகத்தில் குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு

webteam

தமிழகத்தில் 14-வது குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.

குடியரசுத் தலைவர் தேர்தல் இன்று 10 காலை மணிக்கு தொடங்கியது. குடியரசுத் தலைவர் தேர்தலில், பாஜக கூட்டணி சார்பாக ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பாக மீரா குமார் போட்டியிடுகின்றனர். 

டெல்லியில் நாடாளுமன்ற செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு வந்து பிரதமர் நரேந்திர மோடி, தனது வாக்கை செலுத்தினார். அவருடன் பாரதிய ஜனதா தலைவரான அமித்ஷாவும் தனது வாக்கை பதிவு செய்தார். இதையடுத்து மத்திய அமைச்சர்கள், தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்கள் பலரும் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்கை செலுத்தினர். இதே போன்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்களும் வாக்குகளை செலுத்தினர். மேலும் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் தங்கள் வாக்கை பதிவு செய்தனர். இதேபோன்று தமிழக எம்.எல்.ஏ.க்களும் தங்கள் வாக்கை செலுத்தினர். இந்நிலையில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.

இதுவரை நடைப்பெற்ற குடியரசுத் தேர்தலின் போது, வாக்களிக்க அழியாத மை பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் இன்றைய தேர்தலில், அதற்கு பதிலாக மார்க்கர் பேனா பயன்படுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இன்று பதிவாகும் வாக்குகள் 20-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவு அறிவிக்கப்பட உள்ளது.