தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு அறிவிக்கப்பட்டுள்ள பத்மபூஷண் விருதை காலம் தாழ்த்தி வழங்கப்படும் விருதாகவே பார்ப்பதாக அவரது மனைவியும் தேமுதிக பொதுச்செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், “கேப்டன் கொடுத்த அன்பிற்கு கோடிக்கணக்கான மக்கள் திருப்பி செலுத்திக் கொண்டுள்ளார்கள். பத்மபூஷண் விருது காலம் தாழ்த்தி வழங்கப்பட்டுள்ளது, கேப்டனை காலன் எடுத்துச் சென்ற பிறகு கிடைத்துள்ள கௌரவமாகத்தான் பார்க்கிறோம். இது எப்போதோ விஜயகாந்த்திற்கு கிடைத்திருக்க வேண்டிய விருது. காலம் கழித்து கிடைத்தாலும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறோம். மத்திய அரசுக்கு எங்களுடைய நன்றிகளை தெரிவிக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.