பிரேமலதா வெளியிட்டுள்ள அறிக்கையில், டாஸ்மாக் மதுவில் கிக் இல்லை என துரைமுருகன் பேரவையில் பேசியுள்ளதை குறிப்பிட்டுள்ளார். “மூத்த அமைச்சர் ஒருவர் முதலமைச்சர் முன்னிலையில் பேரவையில் இப்படி பேசுவது கண்டனத்திற்குரியது” என பிரேமலதா குறிப்பிட்டுள்ளார்.
துரைமுருகனின் பேச்சு அரசு தங்கள் நிலையை தாங்களே ஒப்புக்கொண்டுள்ளது என்பதாகத்தான் அர்த்தம் எனவும் பிரேமலதா கூறியுள்ளார். 65 உயிர்களை இழந்து வாடும் மக்கள் அமைச்சர் துரைமுருகனின் பேச்சை கேட்டு பேரதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக் கடைகளை ஒழித்து போதை இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்று கூறியுள்ள பிரேமலதா, குடிக்க மதுவை கொடுத்து கோடிகளை சம்பாதிப்பதற்காக மக்களை இப்படி ஏமாற்றுவது ஏற்புடையதல்ல எனவும் கூறியுள்ளார்.