சொத்து மோசடி வழக்கு pt desk
தமிழ்நாடு

சொத்து மோசடி வழக்கு: எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு எதிராக பேசச் சொல்லி மிரட்டுவதாக பிரவீன் புகார்

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு எதிராக பேசச் சொல்லி தன்னை மிரட்டுவதாகவும், அடையாளம் தெரியாத நபர்களால் தான் தாக்குதலுக்கு உள்ளானதானகவும் பிரவீன் என்பவர் புகார் தெரிவித்துள்ளார்.

webteam

செய்தியாளர்: வி.பி. கண்ணன்

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், கரூரில் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்ததாக அண்மையில் சிபிசிஐடி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தார். இதற்கு உடந்தையாக இருந்ததாக பிரவீன் என்ற நபரும் கைது செய்யப்பட்டார். பின் இருவரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டு, தினமும் கரூர் சிபிசிஐடி அலுவலகத்தில் கையெழுத்திட்டு வருகின்றனர்.

MR vijayabaskar

அப்படி சிபிசிஐடி அலுவலகத்தில் கையெழுத்திட்டு சென்ற போது பிரவீனை வழிமறித்து 5 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தி உள்ளது. உடனடியாக மக்கள் கூடியதால் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.

காயமடைந்த பிரவீன் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு எதிராக பேசச் சொல்லி தன்னை மிரட்டுவதாக புகார் கூறினார்.