தமிழ்நாடு

மேட்டூர் அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி முடங்கும் அபாயம்

மேட்டூர் அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி முடங்கும் அபாயம்

rajakannan

நிலக்கரி பற்றாக்குறையால் சேலம் மாவட்டம் மேட்டூர் அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி முற்றிலும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வட மாநிலங்களில் இருந்து நிலக்கரி வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் இந்தப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக முதல் மற்றும் இரண்டாவது அனல்மின் நிலையத்தில் உள்ள நான்காவது அலகில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இருந்து வரவேண்டிய நிலக்கரி கடந்த சில மாதங்களாக வரவில்லை. 

இதனால் கையிருப்பில் இருந்த 3 லட்சம் டன் நிலக்கரி 50 ஆயிரம் டன்னாக குறைந்துவிட்டது. இதன்காரணமாக மின் உற்பத்தி ஆயிரத்து நானூற்று 40 மெகாவாட்டில் இருந்து 540 மெகாவாட் ஆனது. அடுத்த சில நாட்களில் மின் உற்பத்தி முற்றிலும் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.