கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனை pt
தமிழ்நாடு

கிண்டி அரசு மருத்துவமனையில் திடீர் மின்தடை.. சுகாதாரத்துறை செயலாளர் சுப்ரியா விளக்கம்!

கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் திடீர் மின் தடை ஏற்பட்டுள்ளதால் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Rishan Vengai

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் திடீரென ஏற்பட்ட மின்தடையால் நோயாளிகள் பாதிப்பிற்குள்ளாகினர்.

எதனால் மின்தடை? சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்!

கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மின்சாரம் செல்லக்கூடிய கேபிள்களில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் மருத்துவமனைக்கு நேரடியாக சென்ற சுகாதாரத்துறை செயலாளர் சுப்ரியா, “அவசர சிகிச்சை பிரிவில் உள்ளோருக்கு எந்த பாதிப்பும் இல்லை, தனி ஜெனரேட்டர் மூலம் அவசர சிகிச்சை பிரிவுக்கு மின்சாரம் வழங்கப்படுகிறது.

மற்ற நோயாளிகள் பயப்படும் அளவிற்கு எந்த பிரச்னையும் இல்லை, அனைத்து வார்டுகளிலும் சென்று நோயாளிகளை சந்தித்து ஆறுதல் கூறினோம். மருத்துவமனை முழுவதிலும் விரைவில் மின் விநியோகம் சீராகும்” என்று தெரிவித்துள்ளார்.