தமிழ்நாடு

தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

Sinekadhara

தென் தமிழகத்தில் டிசம்பர் 1ல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால் டிசம்பர் 1ம் தேதி தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிகக்கனமழை வரை வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால் தென் தமிழகத்தில் கனமழை முதல் மிகக்கனமழை வரை வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிவர் புயல் பாதிப்பில் இருந்து மக்கள் மெல்ல மெல்ல மீண்டு வரும் சூழலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாகவும், இது தமிழக கடற்கரையை நோக்கி நகரும் எனவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. இதனால் டிசம்பர் 1ல் தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிகக்கனமழை வரை வாய்ப்புள்ளது. தென் கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.