தமிழ்நாடு

வறட்சியால் வாடும் போரூர் ஏரி : இறந்து கிடக்கும் மீன்கள்

வறட்சியால் வாடும் போரூர் ஏரி : இறந்து கிடக்கும் மீன்கள்

webteam

சென்னை போரூரில் உள்ள ஏரி வறட்சியால் வறண்டுள்ள நிலையில், மீன்கள் இறந்து கிடக்கின்றன.

சென்னை போரூரில் உள்ள ஏரி 200 ஏக்கருக்கும் மேலான பரப்பளவைக் கொண்டது. சென்னை குடிநீர் வாரியத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த ஏரியில் இருந்து நீர் எடுத்து குடிநீருக்காக பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் சுற்றுவட்டார பகுதிகளுக்கு தண்ணீர் விநியோகமும் செய்யப்படுகிறது. ஆனால் கடும் வெயில், மழையின்மையால் தற்போது இந்த ஏரி பெரும்பாலும் வறண்டு காணப்படுகிறது. இதனால் ஆங்காங்கே மீன்கள் இறந்து கிடக்கின்றன. 

சில இடங்களில் தேங்கி நிற்கும் நீரில் குதிக்கும் மீன்களை பிடிக்க கொக்கு, நாரைகள் சிறகடித்துக்கொண்டிருக்கின்றன. ஏரியின் பெரும் பகுதியை கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளன. முழுமையாக தூர்வாரப்படாத இந்தச் சீரான வடிவமைப்பற்று, குண்டும் குழியுமாக உள்ளது. சென்னையில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில், மாநகராட்சி நிர்வாகம் தற்போது தான் இந்த ஏரியில் உள்ள மரங்களை அகற்றும் பணியை மேற்கொள்கிறது.