இடிக்கப்பட்ட காமதேனு தியேட்டர் pt desk
தமிழ்நாடு

சென்னை: இடிக்கப்படும் பிரபல சினிமா தியேட்டர்கள்... தரைமட்டமான தியேட்டர் காமதேனு - காரணம் என்ன?

PT WEB

செய்தியாளர்: பிர்தோஷ்

16 ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசியர்களால் கட்டப்பட்ட லக்ஷ்மி விலாஸ் மேன்ஷன், 20 ஆம் நூற்றாண்டில் மயிலாப்பூர் முறையாக உருவாக்கப்பட்டு எல்லைகள் வரையறுக்கப்பட்ட போது, லக்ஷ்மி விலாஸ் காமதேனு தியேட்டராக மாறியது. அதன்பின் இங்கே பல நூறு படங்கள் திரையிடப்பட்டன. மயிலாப்பூர் பகுதியில் அப்போது இருந்த ஒரே திரையரங்கம் காமதேனு.

காமதேனு திரையரங்கம்

அந்த நாட்களில் அருகிலுள்ள பகுதிகளில் இருந்து பல ஆயிரம் மக்களை ஈர்த்தது. டிக்கெட் விலை 50 பைசாவாக இருந்த காலத்தில் இருந்தே அங்கே படங்கள் வெளியிடப்பட்டன. இந்த திரையரங்கு மூன்று தலைமுறை சினிமா ஆர்வலர்களைக் கடந்து நிலைத்து நின்றது.

ஆரம்ப காலம் முதல் இங்கே 2,000 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட்டு ரசிகர்களை மகிழ்வித்து வந்த நிலையில், கொரோனா காலத்திற்குப் பின் இங்கே பெரிய அளவில் படங்கள் திரையிடப்படவில்லை. இதில் ஏற்பட்ட சரிவு உள்ளிட்ட பல காரணங்களால் தியேட்டர் மூடப்பட்டு தற்போது இடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையின் பிரபல தியேட்டர்களில் ஒன்றான உதயம் தியேட்டரும் மூடப்பட உள்ளது. இந்த தியேட்டர் இருக்கும் பகுதியை வாங்கியுள்ள காசாகிராண்ட் நிறுவனம், மிகப்பெரிய அடுக்குமாடி கட்டடம் ஒன்றை கட்ட முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.