தமிழ்நாடு

பூவை: கழிவு நீருடன் குடியிருப்பை சூழ்ந்துள்ள மழை நீர் - இயல்பு வாழ்க்கை பாதிப்பு

பூவை: கழிவு நீருடன் குடியிருப்பை சூழ்ந்துள்ள மழை நீர் - இயல்பு வாழ்க்கை பாதிப்பு

webteam

பூவிருந்தவல்லியில் மழை நின்று 2 நாட்கள் ஆகியும் கழிவு நீரோடு கலந்த மழைநீர் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளதோடு நோய்த்தொற்று ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

பூவிருந்தவல்லி நகராட்சிக்கு உட்பட்ட 7-வது வார்டு முல்லாத் தோட்டத்தில் கடந்த 5 நாட்களுக்கு மேலாக மழை நீருடன் சேர்ந்த கழிவு நீர் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது. தேங்கியுள்ள கழிவு நீர் துர்நாற்றம் வீசுவதோடு கொசு உற்பத்தியாகி நோய் தொற்று ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.

இதுவரை முலலாத் தோட்டத்தில் 10-க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு, மலேரியா அறிகுறியுடன் காய்ச்சல் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே உடனடியாக கழிவு நீரை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கடந்த 5 நாட்களாக சாலையில் தேங்கி நிற்கும் கழிவு நீரால் தங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனைத் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பூந்தமல்லி நகராட்சியை தொடர்பு கொண்டு கேட்டபோது நடைபெற்ற வரும் கால்வாய் இணைக்கும் பணி முடிவுறும் நிலையில் உள்ளதாகவும் இன்னும் ஓரிரு தினத்தில் பணிகள் முடிவுற்ற பிறகு தண்ணீர் தேங்கி நிற்காது எனவும் தற்காலிகமாக மோட்டார் போட்டு தண்ணீரி வெளியேற்றப்படும் என உறுதி அளித்தனர்.