தமிழ்நாடு

ரஜினியை சந்தித்தார் பூனம் மகாஜன்

webteam

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய இளைஞரணி  செயலாளர் பூனம் மகாஜன், நடிகர் ரஜினிகாந்தை சென்னையில் சந்தித்து பேசினார். 

உள்ளாட்சித் தேர்தலை நடத்திட வேண்டும், மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, பாரதிய ஜனதா சார்பில் கோட்டையை நோக்கி இன்று பேரணி நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக வந்துள்ள பூனம் மகாஜன், போயஸ்கார்டனில் ரஜினிகாந்தை சந்தித்தார். அப்போது பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால் இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

’நான் சந்தித்த எளிமையான ஜோடிகளில் ஒன்று லதாஜி மற்றும் தலைவர்’ என்று டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார் பூனம் மகாஜன்.