அத்திவரதர் சிலை வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளத்தில் ஆழ்துளைக் கிணற்றின் நீரை நிரப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில் 48 நாட்கள் நடைபெற்ற அத்திவரதர் வைபவம் நேற்று முன் தினம் நிறைவுபெற்றது. இதையடுத்து நள்ளிரவில் அத்திவரதரின் சிலை அனந்தசரஸ் திருக்குளத்தில் வைக்கப்பட்டது.
இந்நிலையில், அத்திவரதர் சிலை வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளத்தில் ஆழ்துளைக் கிணற்றின் நீரை நிரப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், பொற்றாமரைக் குளத்தில் உள்ள நீரை அனந்தசரஸ் குளத்தில் நிரப்பக் கூடாது எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பொற்றாமரைக் குளத்தின் நீர் இளம்பச்சை நிறத்தில் உள்ளதால் பாசிய படிய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.