தமிழ்நாடு

பொங்கல் பண்டிகை இன்று கொண்டாட்டம் - உற்சாகத்துடன் தமிழர் திருநாள்

பொங்கல் பண்டிகை இன்று கொண்டாட்டம் - உற்சாகத்துடன் தமிழர் திருநாள்

rajakannan

உழவர் திருநாளான பொங்கல் பண்டிகையை தமிழர்கள் அனைவரும் உற்சாகத்துடனும், மண்ணின் மனத்துடனும் இன்று கொண்டாடுகின்றனர். அறுவடைத் திருநாளை முன்னிட்டு, சூரிய பகவானுக்கு, விவசாயிகள் பொங்கலிட்டு வழிபாடு நடத்துகின்றனர்.

தை திங்கள் முதல் நாளான இன்று, தை மகளை வரவேற்கும் விதமாக வீடுகளில் வண்ண கோலமிட்டு, தோரணம் கட்டி, கரும்பு, மஞ்சள் உள்ளிட்டவற்றுடன் பொங்கல் பண்டிகையை மக்கள் கொண்டாடுகின்றனர். புத்தாடை அணிந்து பொதுமக்கள் பொங்கல் பண்டிகையை வழக்கமான உற்சாகமாகத்துடன் கொண்டாடி மகிழ்கின்றனர். 

இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, புதுப்பானையில் புத்தரிசியிட்டு பொங்கலிட்டு வழிபாடு செய்ய தயாராகியுள்ளனர். கரும்பு, மஞ்சள், புத்தாடை, வாசலில் வண்ணக் கோலங்கள், வீடுகளில் விருந்தினரை வரவேற்கும் தோரணங்கள் என ஒவ்வொரு தமிழரின் வீட்டிலும் உழவர் திருநாள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. 

பொங்கலை ஒருங்கிணைந்து கொண்டாட பல்வேறு பகுதிகளில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோயில்களிலும் சிறப்பு வழிபாட்டிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மக்கள் காலையில் இருந்து கோயில்களில் வழிபாடும் செய்து வருகின்றனர்.