தமிழ்நாடு

நீலகிரி: பாரம்பரிய இசையுடன் பழங்குடியின மக்கள் கொண்டாடிய பொங்கல் விழா

நீலகிரி: பாரம்பரிய இசையுடன் பழங்குடியின மக்கள் கொண்டாடிய பொங்கல் விழா

kaleelrahman

அடர்ந்த வனப்பகுதியில் வசிக்கும் குறும்பர் பழங்குடியினர் பாரம்பரிய இசையுடன் நடனமாடி தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.

நீலகிரி மாவட்டத்தில் அடர்ந்த வனப்பகுதியில் வசிக்கும் இருளர் மற்றும் குறும்பர் பழங்குடியின மக்கள் பொங்கல் பண்டிகையை மிகவும் சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். இந்நிலையில் கோத்தகிரி அருகே மாமரம், மேல் கூப்பு குறும்பர் பழங்குடியின மக்கள் தங்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகையை சமத்துவ பொங்கலாக கொண்டாடினர்.

அடர்ந்த வனப்பகுதியில் உள்ள பழங்குடியின மக்கள் ஆடல் பாடல் நிகழ்ச்சியுடன் பொங்கலை கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பழங்குடியினர் இளைஞர்கள் விளையாடுவதற்குத் தேவையான பொருட்களை வழங்கினார்.

நூற்றாண்டுகளைக் கடந்து குறும்பர் பழங்குடியின மக்கள் பாரம்பரியமாக பொங்கல் திருவிழாவை கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.