தமிழ்நாடு

"புதுச்சேரி எம்எல்ஏக்கள் 7 நாள்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்" நாராயணசாமி உத்தரவு

"புதுச்சேரி எம்எல்ஏக்கள் 7 நாள்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்" நாராயணசாமி உத்தரவு

jagadeesh

புதுச்சேரி சபாநாயகர் மற்றும் எம்எல்ஏக்கள் தங்களை 7 நாள்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரி கதிர்காமம் தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜெயபாலுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து அவர் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 20-ந்தேதி தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரில் மூன்று நாட்கள் பேரவை நிகழ்வுகளில் இவர் பங்கேற்றுள்ளார். இதனால் இன்று பேரவைக்கூட்டம் நடைபெறுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

இந்நிலையில் புதுச்சேரி சபாநாயகர் மற்றும் எம்எல்ஏக்கள் தங்களை 7 நாள்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.