தமிழ்நாடு

மையை மைல்கற்களில் பூசாமல் முகத்தில் பூசிக்கொள்ளுங்கள்: பொன்.ராதாகிருஷ்ணன் ஆவேசம்

Rasus

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மைல்கற்களில் பெயிண்டை தடவாதீர்கள். அவரவர்கள் கட்சி மீதும், முகத்தின் மீதும் பூசிக் கொள்ளுங்கள் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கோபத்துடன் பேசினார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் மாநில மொழிகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற டி.ஆர்.பாலுவின் அறிக்கை குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய அவர், மாநில மொழிகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என அவரென்ன சொல்வது..? நானே சொல்கிறேன். மைல்கற்களில் முதலில் தமிழ்தான் இருக்க வேண்டும் என நானே சொல்கிறேன். ஹிந்தியில் எழுதவேண்டும் என சொன்னது யார்? என கேள்வி கேட்டால் அதற்கு பதிலளிக்க வேண்டும் என்றார்.

பெயிண்ட் டப்பாவில் உள்ள பெயிண்டை எடுத்து மைல்கல்கற்களில் தடவாமல் அதனை உங்கள் முகத்திலும் உங்களது கட்சி மீதும் தடவிக் கொள்ளுங்கள் என பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பரப்புரைக்கு தேசிய தலைவர்கள் யாரையும் கூப்பிடவில்லை எனவும் அவர் தெரிவித்தார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா நடைபெறாத வகையில் என்னென்ன நடவடிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதனை தேர்தல் ஆணையம் எடுக்க வேண்டும் எனவும் பொன்.ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார்.