தமிழ்நாடு

இலங்கை கடற்படையை முடக்க வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை கடற்படையை முடக்க வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்

webteam

தமிழக மீனவர்கள் பிரச்னை தீர இலங்கை கடற்படையை முடக்கி வைப்பதே சரியாக வரும் என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழக மீனவர்கள் மீது அண்மையில் இந்திய கடலோரக் காவல் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக மீனவர்கள் குற்றச்சாட்டு எழுப்பினர். அத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மீனவர்களின் உடலில் இருந்து துப்பாக்கி குண்டுகளும் எடுக்கப்பட்டன. ஆனால் அந்த குண்டுகள் தங்களுடையது இல்லை என மறுத்த கடலோரக் காவல்படை, பின்னர் இந்த சம்பவத்திற்கு வருத்தமும் தெரிவித்திருந்தது. இந்நிலையில் கட்சத்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 4 பேரை இ‌லங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இதுதொடர்பாக தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்படுவதைத் தடுக்க இலங்கைக் கடற்படையினரின் நடவடிக்கைகளை முடக்குவதே சரியானதாக இருக்கும் என தெரிவித்தார். தமிழக மீனவர்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு அதுவே தீர்வாக இருக்கும் எனவும் அவர் கூறினார்.