பொன்.மாணிக்கவேல் pt desk
தமிழ்நாடு

“அரசியல்வாதிகளை விட அதிகாரிகள் மோசமானவர்கள்” - அறநிலையத்துறை மீது பொன்.மாணிக்கவேல் குற்றச்சாட்டு

கோயில் திருப்பணிக்காக தனி நபர் நன்கொடையாக வழங்கும் கோடிக்கணக்கான பணத்தை அறநிலையத்துறை அதிகாரிகள் கொள்ளை அடிப்பதாக ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி பொன்.மாணிக்கவேல் குற்றம்சாட்டினார்.

PT WEB

செய்தியாளர்: மோகன்ராஜ்

சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவில் இருந்து ஓய்வு பெற்ற அதிகாரி பொன்.மாணிக்கவேல் சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அறநிலையத்துறை சார்பில் உருவாக்கப்பட்டுள்ள கோயில் பாதுகாப்பு படை செயலற்ற நிலையில் உள்ளது. எந்தவித பலனும் இல்லாத இந்த அமைப்பை கலைக்க வேண்டும்.

இந்து சமய அறநிலையத்துறை

கோயில் பணத்தை இந்து சமய அறநிலையத்துறை சூறையாடி வருகிறது. இந்த துறை கலைக்கப்பட வேண்டும். பல கோயில்கள் மன்னராட்சி காலத்தில் கட்டப்பட்டவை. ஆனால், தஞ்சை பெரிய கோயில், கங்கைகொண்டசோழபுரம் தவிர வேறு எந்த கோயிலையும் புராதண பட்டியலில் காட்டவில்லை. புராதண கோயிலாக காட்டினால் திருப்பணிகள் மேற்கொள்ள முடியாது.

திருப்பணிக்காக தனிநபர்கள் வழங்கும் நன்கொடையை அறநிலையத்துறை அதிகாரிகள் கொள்ளையடிக்கின்றனர்” என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.