தமிழ்நாடு

உயர்மின் அழுத்த கோபுரத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை : மத்திய அமைச்சகம்

உயர்மின் அழுத்த கோபுரத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை : மத்திய அமைச்சகம்

webteam

விவசாய நிலம் உள்ளிட்ட எந்தப் பகுதியிலும் உயர்மின் அழுத்த கோபுரம் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி பெறத் தேவையில்லை என்று மத்திய அமைச்சகத்தின் நிபுணர் மதிப்பீட்டுக் குழு முடிவு செய்துள்ளது.

விளைநிலங்களில் உயர்மின் அழுத்த கோபுரங்கங்களை அமைக்க தமிழகத்தின் கோவை உள்ளிட்ட பகுதிகளில் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், உயர்மின் அழுத்த கோபுரங்களை அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி பெற உத்தரவிட வேண்டும் என ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி, திருப்பூர் எம்.பி. சுப்பராயன் ஆகியோர் மத்திய அரசை வலியுறுத்தினர்.

இதுதொடர்பாக கடந்த 12ஆம் தேதி சுற்றுச்சூழல் அமைச்சக நிபுணர் மதிப்பீட்டுக் குழு கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. அதில், விவசாய நிலம் உள்ளிட்ட எங்கும் உயர்மின் அழுத்த கோபுரம் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி பெறத் தேவையில்லை என முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உயர்மின் அழுத்த கோபுரம் அமைப்பதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லை எனக் கூறி இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.