தமிழ்நாடு

அம்மோனியம் நைட்ரேட்டை ஏலம் விடுவதில் கட்டுப்பாடு - மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு

அம்மோனியம் நைட்ரேட்டை ஏலம் விடுவதில் கட்டுப்பாடு - மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு

webteam

அமோனியம் நைட்ரேட்டை ஏலம் விட தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கட்டுப்பாடு விதித்துள்ளது.

இதுகுறித்து தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “37 கண்டெய்னர்களில் ஒரு கண்டெய்னருக்கு 20 டன் வீதம் 740 டன்கள் அமோனியம் நைட்ரேட்டு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இவை 25 கிலோ கிராம் பாலிபுரோப்பீலின் பைகளின் அடைத்து வைக்கப்பட்டிருப்பதால் ஆபத்து ஏற்பட வாய்பில்லை. லெபனான் விபத்திற்கு பிறகே கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டிருப்பது அமோனியம் நைட்ரேட் என சுங்கத்துறை தகவல் சொன்னது.

அதுவரை அங்கு யாருக்கும் இந்த கண்டெய்னர்களில் இருப்பது என்னவென்றே தெரியாது. வெடி மருந்தாக மட்டுமல்லாமல், விவசாயத்திற்கான உரம் தயாரிப்புக்கும், தொழிற்சாலைகளுக்கும் இந்த அம்மோனியம் நைட்ரேட் பயன்படுகிறது.

மணலியில் உள்ள சரக்கு பெட்டக மையத்தில் சுங்கத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் 740 டன் அமோனியம் நைட்ரேட் ரசாயனத்தை ஒரே நபருக்கு ஏலம் விடாமல் பிரித்து தனித்தனியாக ஏலம் விட வேண்டும். மூன்று நாட்களில் ஏல நடவடிக்கையை முடித்து, விரைவாக அப்புறப்படுத்த வேண்டும். இந்த இடத்தை தொழிலக பாதுகாப்பு துறை இயக்குநர் ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது.