பொள்ளாச்சி அருகேயுள்ள கோட்டூர் பழனியூர் கோவில் திருவிழாவில் வீதிஉலா சென்ற தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் பழனியூர் மாகாளியம்மன் குண்டம் தேர்த் திருவிழா கடந்த மார்ச் 4 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது இதனையடுத்து நேற்று குண்டம் இறங்குதல் நிகழ்வு நடைபெற்றது இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து இன்று தேர்த் திருவிழா நடைபெற்றது. இதில், பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்துச் சென்றனர் அப்போது கோட்டூர் சந்தைப்பேட்டை அருகே தேர் வீதியில் செல்லும்போது திடீரென்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை.
இதையடுத்து உடனடியாக தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.