Annamalai pt desk
தமிழ்நாடு

”பாஜக வாங்கிய 11% ஓட்டும் அண்ணாமலையின் உழைப்பா?”- கேள்விகளை அடுக்கிய அரசியல் விமர்சகர் பொன்.வில்சன்!

webteam

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது. இந்தத் தேர்தலில் திமுக - 26.93%, அதிமுக - 20.46%, பாஜக - 11.24%, நாம் தமிழர் - 8.19%, காங்கிரஸ் - 10.67%, பாமக - 4.4%, தேமுதிக - 2.59%, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - 2.15%, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - 2.5% வாக்குகள் பெற்றுள்ளன.

Annamalai

அதிமுகவின் தோல்வி குறித்து விவாதங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளில் 28 தொகுதிகளில் அதிமுக கூட்டணியும், 11 தொகுதிகளில் பாஜக கூட்டணியும் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளன. அதாவது அதிமுகவின் வாக்கு வங்கி பாஜகவுக்கு சென்றுவிட்டதாகவும், திமுகவின் எதிர்ப்பு வாக்குகள் பாஜக பக்கம் சாய்ந்துவிட்டதாகவும், அதிமுக பிரிந்து இருப்பதாலே இந்த சரிவு ஏற்பட்டதாகவும் என பல கோணங்களில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால், அதிமுக தரப்பிலோ தங்களது வாக்கு வங்கி சதவீதம் குறையவில்லை என்றும் கடந்த தேர்தலை காட்டிலும் அதிகரிக்க செய்துள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அதிமுகவின் சரிவுக்கு முகம் கொடுக்க மறுக்கிறாரா எடப்பாடி பழனிசாமி என்ற தலைப்பில் நேர்படப்பேசு நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேசிய அரசியல் விமர்சகர் பொன் வில்சன் 11% ஓட்டும் அண்ணாமலையின் உழைப்பா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். அவர் பேசியதை முழுமையாக இந்த வீடியோ தொகுப்பில் பார்க்கலாம்.