அரசு பேருந்தில் தான் இலவசமாக பயணம் செய்யவில்லை என ஆயுதப்படை காவலர் ஆறுமுக பாண்டியன் தெரிவித்துள்ளார்.
நெல்லை நாங்குநேரியில் இருந்து பாளையங்கோட்டைக்கு அரசு பேருந்தில் பயணித்த ஆயுதப் படை காவலர் ஆறுமுக பாண்டியன், டிக்கெட் எடுக்க மாட்டேன் என வாக்குவாததில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.
இதையடுத்து துறை ரீதியான விசாரணைக்கு சென்னை ஆயுதப்படை உதவியாளர் சீனிவாசன் முன்பு ஆஜரான போது, அவருக்கு திடீர் உடல்நலகுறைவு ஏற்பட்டது. மயங்கி விழுந்த அவரை மீட்டு காவலர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து ஆறுமுக பாண்டியன் வீடு திரும்பினார்.இந்நிலையில், “அரசு பேருந்தில் நான் இலவசமாக பயணம் செய்யவில்லை.பயணச்சீட்டு எடுத்துதான் பயணம் செய்தேன்.” என ஆயுதப்படை காவலர் ஆறுமுக பாண்டியன் தெரிவித்துள்ளார்.