தமிழ்நாடு

தற்கொலைக்கு முயன்ற குடும்பத்தினரை பத்திரமாக மீட்ட போலீஸ்

தற்கொலைக்கு முயன்ற குடும்பத்தினரை பத்திரமாக மீட்ட போலீஸ்

webteam

தனியார் தங்கும் விடுதியில் தற்கொலைக்கு முயன்ற கேரள குடும்பத்தினரை பத்திரமாக மீட்ட, பழனி காவல் துறையினருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீநாத். இவர் தனது மனைவி சுஸ்ராஜ் மற்றும் 2 வயது மகன் அர்த்த மௌலிநாத் உடன் பழனி வந்துள்ளார். பழனி அடிவாரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் குடும்பத்துடன் தங்கிய இவர் மலை கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். பின்னர் கேரளாவில் உள்ள தனது உறவினருக்கு போன் செய்து தாங்கள் இனி ஊருக்குத் திரும்ப மாட்டோம் என்றும் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் தெரிவித்து செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டார். 

இதனால் பதறிப்போன உறவினர்கள் கேரளக் காவல்துறையினர் உதவியுடன் பழனி காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பழனி பகுதியில் உள்ள அனைத்து தனியார் விடுதிகளிலும் சோதனை மேற்கொண்டனர். இறுதியாக அடிவாரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் ஸ்ரீநாத் குடும்பத்துடன் இருப்பதை கண்டுபிடித்த போலீசார் அவர்களை மீட்டனர். பின்னர் மீட்கப்பட்டவர்கள் அவர்களின் உறவினர்களிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டனர். 

இச்சம்பவம் பழனி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவல் கிடைத்ததும் துரிதமாக செயல்பட்டு 3 உயிர்களை காப்பாற்றிய பழனி டிஎஸ்பி விவேகானந்தன் மற்றும் ஆய்வாளர் செந்தில்குமாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.