திண்டுக்கல்  புதிய தலைமுறை
தமிழ்நாடு

கஞ்சா புகைப்பது போல் வீடியோ வெளியிட்ட இளைஞர்கள்.. அவர்கள் ஸ்டைலிலேயே பாடம் கற்பித்த காவல்துறை!

PT WEB

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கஞ்சா புகைப்பது போல் வீடியோ வெளியிட்ட இளைஞர்களைக் கொண்டே காவல்துறையினர் கஞ்சாவுக்கு எதிராக விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு உட்பட்ட சிறுவர் பூங்காவில் ஆறு இளைஞர்கள் கஞ்சா புகைப்பது போன்றவும், கஞ்சா போதையில் ஆங்காங்கே விழுந்து கிடப்பது போலவும் ரீல்ஸ் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து வீடியோ வெளியிட்ட 6 பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

பின்னர் எந்தெந்த இடத்தில் அமர்ந்து ரீல்ஸ் எடுத்தார்களோ அதே இடத்தில் இளைஞர்கள், கஞ்சா வீட்டுக்கும் நாட்டுக்கும் உடலுக்கும் கேடு, கல்வி தரும் பாதை இருக்க இழிவு தரும் போதை எதற்கு போன்ற விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி வீடியோ எடுத்து வெளியிட்டனர். மேலும், ”லைக்குகளுக்கு ஆசைப்பட்டு நாங்கள் வீடியோ வெளியிட்டோம். போதைப் பொருள் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவோம்.” என்று அந்த வீடியோவில் தெரிவித்துள்ளனர்.