தமிழ்நாடு

பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு: மாணவர்கள் போராட்டத்தில் காவல்துறை தடியடி

பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு: மாணவர்கள் போராட்டத்தில் காவல்துறை தடியடி

Rasus

வேலூரில் பேருந்து கட்டன உயர்வை ரத்து செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். ‌அப்போது மாணவர் ஒருவர் கல் வீசித்தாக்கியதில் காவலர் ஒருவர் காயம் அடைந்தார்.

தமிழக அரசு பேருந்துகளின் கட்டணம் சராசரியாக 60 சதவீதம் வரை உயர்த்தப்பட்டு கடந்த 20-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இந்நிலையில், கடந்தஞாயிற்றுக்கிழமை சிறிய அளவில் பேருந்து கட்டணம் குறைக்கப்பட்டது. பேருந்து கட்டண உயர்வுக்கு பல்வேறு தலைவர்களும் தங்களது எதிர்ப்பினை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பேருந்து கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி வேலூரில் மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஓட்டேரியிலுள்ள முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரமாக சாலை மறியல் நடந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாணவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டம் கைவிடப்படாததால் மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. இதனால் மாணவர் ஒருவர் கல் வீசித்தாக்கியதில் காவலர் ஒருவர் காயம் அடைந்தார்.