118 சவரன் நகைகள் கொள்ளை – போலீசார் விசாரணை pt desk
தமிழ்நாடு

கோவை: வீட்டின் கதவை உடைத்து 118 சவரன் நகைகள் கொள்ளை – போலீசார் விசாரணை

கோவை அருகே வீட்டின் கதவை உடைத்து 118 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

செய்தியாளர்: பிரவீண்

கோவை மாவட்டம் கோவில்பாளயத்தை அடுத்து வழியாம்பாளையம் கிராமம் உள்ளது. இங்குள்ள வில்லா குடியிருப்பில் பாலசுப்ரமணியன் என்பவர் தனது மனைவி சுதாவுடன் வசித்து வருகின்றார்.

கடந்த 30 ஆம் தேதி மனைவி சுதாவுடன், பொள்ளாச்சி அருகே புரவிபாளையம் பகுதியில் உள்ள தோட்டத்து வீட்டிற்குச் சென்று தீபாவளி பண்டிகையை கொண்டாடி விட்டு நேற்று அதிகாலை வழியாம்பாளையத்தில் உள்ள வீட்டிற்குத் திரும்பியுள்ளார் பாலசுப்ரமணியன்.

118 சவரன் நகைகள் கொள்ளை – போலீசார் விசாரணை

அப்போது வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டு, மர பீரோவில் வைத்திருந்த 118 சவரன் தங்க நகைகளும் , 75 கேரட் வைர நகைகளும் திருட்டு போயிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து கோவில்பாளையம் காவல் நிலையத்தில் பாலசுப்ரமணியன் புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மற்றும் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டனர்.

இதையடுத்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கோவில்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.