பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க திருவல்லிக்கேணி காவல்துறையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ஆம் தேதி நடைபெற உள்ளதால் போலீசார் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். பதற்றமான வாக்குசாவடிகள் கண்டறியப்பட்டு, அங்கு அசாம்பாவிதங்கள் ஏற்படுத்தக்கூடிய ரவுடிகளை கைது செய்து வருகின்றனர். உள்ளாட்சி தேர்தலின் போது சென்னையில் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலின் போது பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என்பதற்காக சென்னையில் பதற்றமான வாக்குசாவடி அமைந்துள்ள பகுதிகளில் போலீசார் கொடி அணிவகுப்பு பேரணி நடத்தி வருகின்றனர். அதன் ஒரு கட்டமாக திருவல்லிக்கேணி உதவி ஆணையர் பாஸ்கர் தலைமையில் திருவல்லிக்கேணி காவல் மாவட்டத்திற்குட்பட்ட காவல் நிலைய காவல் ஆய்வாளர்கள், காவலர்கள் இணைந்து இன்று மாலை கொடி அணிவகுப்பு நடத்தினர்.
குறிப்பாக மாட்டான் குப்பம், வி.ஆர் பிள்ளை தெரு, பெல்ஸ் சாலை, பாரதி சாலை, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, எல்லீஸ் சாலை, ஜாம்பஜார் மார்க்கெட், பிள்ளையார் கோவில் தெரு், பார்டர் தோட்டம், ஜிபி சாலை, எஸ்.எம் நகர் ஆகிய பகுதிகளில் அணிவகுப்பு நடத்தியும், இருசக்கர வாகனங்களில் சென்று அச்சமின்றி வாக்களிக்க வேண்டுமென காவல்துறையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.