தமிழ்நாடு

கல்வராயன் மலைப்பகுதியில் 2800 லிட்டர் சாராய ஊறல்கள் அழிப்பு ! 3 பேர் கைது

கல்வராயன் மலைப்பகுதியில் 2800 லிட்டர் சாராய ஊறல்கள் அழிப்பு ! 3 பேர் கைது

webteam

கல்வராயன் மலைப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியில் சேராப்பட்டு முதல் வெள்ளிமலை செல்லும் சாலையில் அமைத்துள்ள கூட்டாராம் பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சப்படுவதாக மதுவிலக்கு பிரிவுக்கு தகவல் வந்தது.

இதையடுத்து கள்ளக்குறிச்சி மதுவிலக்குப்பிரிவு ஆய்வாளர் ரேவதி தலைமையிலான போலீசார் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது கூட்டாராம் மேற்கு ஓடை பகுதியில் 6 பேரல்களில் வைக்கப்பட்டிருந்த 1800 லிட்டர் சாராய ஊறல்கள் மற்றும் தரையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 1000 லிட்டர் சாராய ஊறல்கள் என மொத்தமாக 2800 லிட்டர் சாராய ஊறல்களை கண்டுபிடித்து அழித்தனர்.

அதுமட்டுமின்றி கள்ளச்சாரயம் காய்ச்ச ஆறு மூட்டையில் வைத்திருந்த 240 கிலோ வெல்லத்தையும் 110 லிட்டர் சாராயம் மற்றும் இரண்டு இருசக்கர மோட்டார் வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் இது தொடர்பாக கூட்டாராம் பகுதியை சேர்ந்த செல்வராஜ், ரானேஷ் மற்றும் வெங்கோடு பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் ஆகிய மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.