தமிழகத்தில் காலியாக உள்ள 8,826 காவலர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு இன்று நடைபெறுகிறது. இதில் 3 லட்சத்து 22 ஆயிரம் பேர் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக காவல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் தேர்வுகளை நடத்தி ஆட்களை தேர்ந்தெடுக்கிறது. இந்த ஆண்டு 8,826 காவலர் பணியிடங்கள், நிரப்பப்பட உள்ளன. தமிழகம் முழுவதும் 228 மையங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது.
காலை 10 மணிக்கு தொடங்கி 11.20மணி வரை 80 நிமிடங்கள் நடத்தப்படுகிறது. இதில் தேர்வாகும் நபர்களுக்கு உடற்தகுதி தேர்வு நடத்தப்படும். எழுத்துத்தேர்வில் 80 மதிப்பெண்களும், உடல்தகுதித் தேர்வில் 15 மதிப்பெண்களும் வழங்கப்படும். கூடுதலாக என்.சி.சி, விளையாட்டு வீரர்களுக்கு சான்றிதழ்கள் அடிப்படையில் 5 மதிப்பெண் வழங்கப்படுகிறது.
தேர்ச்சி பெறுபவர்கள் காலிப்பணியிடங்களுக்கு ஏற்றவாறு, வகுப்புவாரியாக 1:5 விகிதாசாரப்படி அடுத்தக்கட்டமாக உடல் தகுதி தேர்வுக்கு அனுப்பப்படுவர். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் விபரம் 2 மாதங்களில் ஆன்லைனில் வெளியிடப்படும்.