கரூரைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கொடுத்த புகாரில், “எம்.ஆர்.விஜயபாஸ்கர் அமைச்சராக இருந்த போது 100 கோடி ரூபாய் மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் மிரட்டி எழுதி வாங்கிக் கொண்டார்” என தெரிவித்திருந்தார்.
அதேசமயம், இதே விவகாரத்தில் தன்னை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஆட்கள் மிரட்டுவதாக கரூர் சார் பதிவாளர் முகமது அப்துல்காதர் அளித்த புகாரை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கில் முன் ஜாமின் கோரி எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனுவை கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சிபிசிஐடி கைதுக்கு அஞ்சி தலைமறைவாகி உள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் உள்ளிட்டோர் மீது 6 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிந்துள்ளனர்.