ஊடக ஜனநாயகம் மீதான அடக்குமுறையைக் கண்டித்து நெல்லையில் போராட்டம் நடத்திய பத்திரிகையாளர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
நெல்லை மகேந்திரகிரி அருகே பயங்கர சத்தத்துடன் புகைவந்தது தொடர்பாக செய்தி வெளியிட்டதால், பத்திரிகையாளர்கள் மூவர் மீது பணகுடி காவல்துறையினர் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். பத்திரிகையாளர்கள் ஜனநாயக கடமையை ஆற்றவிடாமல் தடுக்கும் இந்த நடவடிக்கையைக் கண்டித்து, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்ட பத்திரியாளர்கள் 150க்கும் மேற்பட்டோர், பாளையங்கோட்டையில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை நோக்கி சென்றவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
பின்னர் நெல்லை-திருச்செந்தூர் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்ட பத்திரிகையாளர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தினர். இதில் பத்திரிகையாளர்கள் சிலர் காயமடைந்தனர். காவல்துறையினர் பிளேடை வைத்து உடலில் காயத்தை ஏற்படுத்தியதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் புகார் தெரிவித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பத்திரிகையாளர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.