சம்போ செந்தில், ஆம்ஸ்ட்ராங் pt web
தமிழ்நாடு

10 ஆண்டுகளுக்கும் மேல் சம்போ செந்தில் தலைமறைவு... இன்ஸ்டாகிராமிடம் உதவி கேட்கும் காவல்துறை!

PT WEB

சம்போ செந்திலைப் பிடிக்க 10 தனிப்படைகள்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 18 நபர்களை போலீசார் கைது செய்துள்ள நிலையில், அதில் திருவேங்கடம் என்ற ரவுடி என்கவுண்டர் செய்யப்பட்டார்.

ஆம்ஸ்ட்ராங்

இந்த நிலையில், இவ்வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் முக்கிய ரவுடியான சம்போ செந்திலைப் பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்தாலும், காவல்துறையினரின் தீவிர விசாரணை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இந்நிலையில் கடந்த 10 வருடங்களுக்கும் மேல் சம்போ செந்தில் போலீசாரிடம் சிக்காமல் இருப்பது எப்படி? என்ற தகவல் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிக்காமல் இருந்தது எப்படி?

அதாவது வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளில் பதுங்கி கொண்டே தனது கூட்டாளிகளுக்கு செல்போன் மூலமாக மட்டுமே உத்தரவுகளை பிறப்பித்து வந்துள்ளார் சம்போ செந்தில். இதற்காக அவரது கூட்டாளிகள் பிரத்யேக செல்போன்களை பயன்படுத்தி வந்ததும் தெரியவந்துள்ளது.

சம்போ செந்தில்

சம்போ செந்தில் வி.பி.என்-ஐ பயன்படுத்தி இன்ஸ்டாகிராம் மற்றும் டெலிகிராம் மூலமாக மட்டுமே அவரது கூட்டாளிகளின் பிரத்யேக செல்போன்களுக்கு தொடர்பு கொண்டு பேசுவதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார். சம்போ செந்தில் பேச விரும்பும் நபர்களிடமும், கூட்டாளியின் செல்போனுக்கு மேற்கண்டபடி கால் செய்து லவுட் ஸ்பீக்கர் மூலமாக மட்டுமே பேசி வந்ததும் தெரியவந்தது. இதனால் ரவுடி சம்போ செந்திலை டிராக் செய்வதில் போலீசாருக்கு சற்று சிரமம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இன்ஸ்டாகிராமிடம் உதவிகேட்ட காவல்துறை

தொடர்ச்சியாக சம்போ செந்தில் அவரது கூட்டாளிகளுடன் மதிய வேளைக்கு பிறகே பேசுவதால், அவர் வெளி நாட்டில் இருந்து கொண்டு அந்த நேரத்திற்கேற்ப பேசுவதாக போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

ஆம்ஸ்ட்ராங் படுகொலை-

ஏற்கெனவே சம்போ செந்திலுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு, 15 வருடங்களுக்கு முந்தைய படம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளதால் சம்போ செந்திலின் தற்போதைய உருவம் குறித்து அறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் தனிப்படை போலீசார் சம்போ செந்திலின் முழு விவரங்களை சேகரித்து கைது செய்யும் பணிகளில் இறங்கி உள்ளனர். மேலும், சம்போ செந்தில் தொடர்பு கொள்ளும் நபர்களின் முழு பட்டியலையும் கேட்டு இன்ஸ்டாகிராம் மற்றும் டெலிகிராம் போன்ற நிறுவனத்திற்கு சென்னை காவல்துறை கடிதம் அனுப்பி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.