தமிழ்நாடு

திருச்சி கொள்ளை: முக்கிய குற்றவாளி முருகனின் அண்ணன் மகன் முரளி கைது

திருச்சி கொள்ளை: முக்கிய குற்றவாளி முருகனின் அண்ணன் மகன் முரளி கைது

webteam

திருச்சி லலிதா ஜுவல்லரி நகை கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான முருகனின் அண்ணன் மகன் முரளியை போலீசார் கைது செய்தனர்

திருச்சி லலிதா ஜுவல்லரியில்  நடந்த கொள்ளையில் 13 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், வைரம், பிளாட்டினம் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. தமிழகத்தை பரபரப்பாக்கிய கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டுபிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. பின்னர் நடந்த வாகன சோதனையில், மணிகண்டன் என்பவர் 4 கிலோ 250 கிராம் நகைகளுடன் திருவாரூரில் பிடிபட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் குற்றவாளி சுரேஷின் தாயார் கனகவள்ளியும் கைது செய்யப்பட்டார்.

இருவரையும் கைது செய்து திருச்சி அழைத்துவந்த தனிப்படை காவல்துறையினர், ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் திருச்சி முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான முருகனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மூளையாக செயல்பட்ட முருகன் பிடிபட்டால் கொள்ளை சம்பவத்தின் முழு பின்னணி அம்பலமாகும் என்கிறது காவல்துறை. இந்நிலையில் முருகனின் அண்ணன் மகன் முரளியை போலீசார் கைது செய்துள்ளனர். முரளியிடம் இருந்து முருகன் குறித்த தகவல்கள் கிடைக்கலாம் எனவும் போலீசார் எதிர்ப்பார்க்கின்றனர்.