தமிழ்நாடு

தோற்றபிறகு கூட்டணி கட்சியினரை விமர்சிப்பது பாமகவின் வாடிக்கை: அதிமுகவின் புகழேந்தி

தோற்றபிறகு கூட்டணி கட்சியினரை விமர்சிப்பது பாமகவின் வாடிக்கை: அதிமுகவின் புகழேந்தி

Veeramani

ஒவ்வொரு முறையும் கூட்டணி சேர்வதும் தேர்தல் தோல்விக்கு பின்னர் மற்றவர்களை விமர்சனம் செய்வதும் பாமகவின் வாடிக்கையாக உள்ளது என அதிமுகவின் செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்தார்.

இது தொடர்பாக பேசிய புகழேந்தி, “ஓ.பன்னீர் செல்வத்தை நாங்கள் பொருட்டாக மதிப்பதில்லை என பாமகவின் அன்புமணி ராமதாஸ் தெரிவித்திருக்கிறார். ஆனால், ஓபிஎஸ் அவர்கள் கையெழுத்து போட்டதால்தான் இன்று அதிமுக மூலமாக அன்புமணி எம்.பி ஆக உள்ளார். எனவே அவர்கள் தவறாக ஒரு கட்சியை பற்றி பேசக்கூடாது, அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால்தான் பாமக தோற்றுவிட்டதாக சொல்வதை ஏற்க முடியாது.

பாமக வலுவாக உள்ள பகுதிகளில் எல்லாம் முழுவதுமாக அதிமுக தோற்றுள்ளது, எனவே அவர்கள் எங்கள் தலைவர்களை குறை சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒவ்வொரு முறையும் கூட்டணி சேர்வதும் தேர்தல் முடிவுக்கு பின்னர் மற்றவர்களை விமர்சனம் செய்வதும் பாமகவின் வாடிக்கையாக உள்ளது.

6 தொகுதிகளில் மட்டுமே பாமகவுக்கு செல்வாக்கு உள்ளது. மற்ற தொகுதிகளில் ஏன் தோல்வி அடைந்தோம் என்பது பற்றி முதலில் பாமக ஆராய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.