தமிழ்நாடு

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் : முன்னாள் குண்டுவெடிப்பு கைதி முஹம்மது ரபிக் கைது

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் : முன்னாள் குண்டுவெடிப்பு கைதி முஹம்மது ரபிக் கைது

webteam

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுப்பது போன்ற ஆடியோ ஒன்று வாட்ஸ் அப்பில் கடந்த வெள்ளியன்று வைரலானது. இது தொடர்பாக முன்னாள் கைதி ஒருவர் கைதுசெய்துபட்டுள்ளார்.

கோவை கரும்புக்கடை சாரமேடு பகுதியை சேர்ந்தவர் 50 வயதான முஹம்மது ரபிக். கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி  10 ஆண்டு சிறையில் இருந்தவர். இவர் தற்போது கோவையில் தொழில் நடத்தி வருகிறார். இவர் கடந்த வாரம் பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுப்பது போன்ற ஆடியோ வாட்ஸ் அப்பில் வைரலாகிருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. சேலம் பகுதியை சேர்ந்த ஒருவரிடம் பேசிய முகம்மது ரபி, தொழில் தொடர்பாக பேசினார். அந்த சமயத்தில் தான் அத்வானிய்யை கொலை செய்ய குண்டு வைத்ததாகவும், சிறை சென்றதாகவும் தெரிவித்தார். மேலும் பிரதமர் மோடியை கொலை செய்ய தன்னிடம் திட்டம் இருப்பதாவும் தெரிவித்தார். இந்த ஆடியோவை சேலத்தை சேர்ந்த அந்த நபர், ஆடியோவை வாட்ஸ் அப்பில் பதிவிட்டார். 

இதனை தெரிந்து கொண்ட போலீசார் முகம்மது ரபியை தேடி வந்தனர். இதற்கிடையில் முஹம்மது ரபிக் மீது கொலை மிரட்டல்மற்றும் இறையாண்மைக்கு பங்கம் விளைவிப்பது போன்ற 2 பிரிவுகளில் கீழ் கோவை குனியமுத்தூர் காவல்துறையினர்  வழக்குப்பதிந்து  கைது செய்துள்ளனர்.